(10-10-2022)
“ மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே ” என்ற தொனிப் பொருளில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று (10) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுனர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து கொழும்பு காலி முகத்திடல் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்து 5 பொதுமக்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் நேற்றைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், காலி முகத்திடலில் போராட்டக்களத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வில் நேற்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 16 வயது மாணவன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் தொடர்ந்தும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.