எமது யாழ். செய்தியாளர்.
கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தினை டிப்பர் வாகனம் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றுடன் டிப்பர் வண்டி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த 35 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த பணியாளர.கள் பல நோயாளர் காவு வண்டிகள் மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.