இங்கிலாந்தில் தலைமையகத்தைக் கொண்ட GRIFFIN COLLEGE LONDON நிர்வாகிகளை கடந்த செவ்வாய்க்கிழமை மார்க்கம் நகரில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்து கௌரவித்த ஒன்றாரியோ மாகாண உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் நிர்வாகிகளைப் பாராட்டி ஒன்றாரியோ அரசு சார்பான கௌரவச் சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார்.
நிறுவனத்தின் தலைவர் திரு நாதன் ராகுலன் தனது குழுவினருடன் இங்கிலாந்திலிருந்து கனடாவிற்க வருகை தந்து கனடாவில் கல்லூரியின் கிளையை அமைக்கும் முயற்சிகளில் இறங்கியிருந்தார். அதற்கான வைபவத்தையும் நடத்தினார்.
இதனை யொட்டி ஒன்றாரியோ மாகாண உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் நிர்வாகிகளைப் பாராட்டி ஒன்றாரியோ அரசு சார்பான கௌரவச் சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார்.
கனடாவில் உள்ள பல நுண்கலைக் கல்லூரிகளின் ஆசிரியைகள் தங்கள் மாணவிகளை இந்த கல்லூரி உலகளவில் நடத்தும் பரீட்சைகளுக்கு அனுமதிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.