ஏன். ஆர். லோகேந்திரலிங்கம் அவர்கள்
ஸ்தாபகர், ஆசிரியர், கனடா உதயன்
வாழ்நாள் முழுதும் நினைத்து நினைத்துப் பெருமைப்படத்தக்க ஒரு பெரிய விருதாகிய கனடா உதயனின் “வாழ்நாள் சாதனையாளர் விருதினை” எனக்கு வழங்கி என்னை மிகவும் கௌரவப்படுத்தியுள்ளீர்கள். மிகுந்த மனநிறைவோடும் மகிழ்ச்சிப் பெருக்கோடும் எனது அன்பான நன்றிகளை தெரிவிக்கின்றேன். இந்த விருது ஓர் உலகளாவிய விருது. ஆதளைப் பெற்ற மேடை, அந்த விழா, அங்கு வந்து கலந்துகொண்ட தகுதி மிக்க பெருந்தகையாளர்கள் என எல்லாமே என்ளை வியக்க வைத்தன.
எங்கள் இளமைக்கால நட்பிளை நினைவுகூர்ந்து மகிழ்வதற்கும் இந்நிகழ்வு காரணமாக அமைகின்றது. கனடா உதயன் இன்னுமின்னும் வளர்ந்து இன்னுமின்னும் பனிசெய்து வான்புகழுடன் நீடு வாழவேண்டும் எனவும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழவேண்டும் எனவும் வாழ்த்தி, மீண்டும் நன்றிகூறி மகிழ்கிறேன்.
அன்புடன்,
கோப்பாய் சிவம்.
கனடாக் கந்தசுவாமி ஆலயம்,
ரொறன்ரோ.