கதிரோட்டம்- 28-10-2022 வெள்ளிக்கிழமை
அரசாங்கத்தோடு இணைந்த பயணிக்க தயார் என அடிக்கடி சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த பல தசாப்தங்களாக அடிதக்கடி சொல்லி வருவது சிங்களத் தலைவர்கள் யாரையாவது காப்பாற்றுவதற்காக மட்டுந்தான் என்பது தமிழ் மக்கள் அனைவரும் அறிவார்கள் எனவே இனிமேல் அவ்வாறு மறந்தும் கூறிவிடாதீர்கள் என்று அவர்களைப் பார்த்து ஒவ்வொரு தமிழ் பிரஜையும் தெரிவிக்க வேண்டும் என்பது தற்போதைய அரசியல் ‘தேவை’யாக உள்ளது.
இவ்வாறு நாம் எழுதுவதற்கு பல காரணங்கள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழ்த் தலைமைகள் கடைப்பிடித்துவரும் அரசியல் ‘சாணக்கியத்தின்’ மூலம் புலனாகியுள்ளன.
பல வருடங்களுக்கு முன்னர் ரணில் பிரமராக பதவி வகித்த நேரத்தில் அவருக்கு ஏதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது. ‘ தமிழ் மக்களின் நன்மை கருதி நாம் அரசாங்கத்தோடு சேர்ந்தே பயணிக்க விரும்புகின்றோம்’ என்று கூறிய தமிழர் தரப்பு அப்போது ரணிலின் அரசியல் ‘தலையை’ காப்பாற்றிக் கொள்ள உதவியது.
தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியையும் எம்பி பதவியையும் ‘ கட்டிப் பிடித்தபடி உள்ள’ சம்பந்தர் அவர்கள் அரசாங்கத்தோடு சேர்ந்த பயணிக்க விரும்புகின்றோம்’ என்று தெரிவித்துள்ளமை எமது மக்கள் அறிந்த ஒன்றே.
இவ்வாறாக தலைவர் சம்பந்தர். சுமந்திரன்; மற்றும் ஶ்ரீதரன் சிவஞானம் ஆகிய மூவரும் சேர்ந்து ஏனைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘மூளைச் சலவை’ செய்து ஒவ்வொரு நகர்விலும் ரணில் போன்ற புல்லுருவிகளை காப்பாற்றுவது அவர்களுக்கு வாக்களித்த தமிழ் வாக்காளர்கள் நன்கு கண்டு கொண்ட அவர்களது தந்திரமான அரசியல் நகர்வுகளே ஆகும்.
ஆனால் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டாமல் சிறைகளின் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எவ்விதமான மாற்றங்களும் நிகழாமல் இந்த மூன்று அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே நன்மைகள் கிட்டுகின்றன என்பது தெளிவாகின்றது
மேலும் ‘இன்றைய தமிழ்த் தலைமைகளிடம் அரசியல் தீர்வுகுறித்த எந்தவிதமான யோசனைகளும் அவர்கள் கைவசம் இருக்கின்றதா அன்றி அவர்களிடம் ஏதாவது .தீர்வுப் பொதிகள் உள்ளனவா என்று பார்த்தாலும் அவையும் இல்லை என்றே பதில் வருகின்றது. மாறாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று காலத்தைக் கடத்திய வண்ணம் அரசாங்கத்திடமிருந்த சகல சலுகைகளையும் சன்மானங்களையும் பெற்றுக்கொள்வது மட்டும் தான் அவர்களின் ‘கைவண்ணம் என்பது நன்கு புலனாகின்றது.
ஆனால் தங்களிடம் தீர்வுத் திட்டங்கள் உள்ளதாக பொய்களைக் கூறி வந்த மாவை சேனாதிராஜா போன்றவர்கள் தற்போது பதவியில்ி இல்லை. என\வே இந்த மூன்று பேர் மட்டுமே இவ்வாறு தொடர்கின்றார்கள்;.
கடந்த காலங்களில் தங்களிடம் நல்ல திட்டங்கள் இருப்பதாக கூட்டங்களிலும் ஊடகங்களிலும் கூறினாலும்கூட அந்த ஆவணத்தை காட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. மக்களை முட்டாள்களாக்கி தொடர்ந்தும் ‘கதிரை அரசியல்’ நடத்த முனைந்தனர் இவர்கள்.
அத்துடன் அவர் நின்றுவிடவில்லை இன்றைய தமிழ் தலைமைத்துவ பரம்பரை தமிழர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கல்ல அரசியல் மக்களின் சேவைக்கே அரசியல் தேவை என்ற அடிப்படையில் மக்களுக்காக இதய சுத்தியுடன் பணியாற்றக் கூடியவர்களின் அரசியல் பிரவேசமே இன்றைக்குத் தேவை. ஏனெனில் இன்றைய தமிழ்த் தலைமைத்துவங்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகத்தை மீட்கும் நிலையில் இல்லை என்பதும் நன்கு புலனாகின்றது