கடந்த 15-10-2022 அன்று வெற்றிகரமாக நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவில் வெளிநாடுகளுக்கு உரிய சர்வதேச விருதுகளைப் பெற்ற வெளிநாட்டுப் பிரமுகர்களான திருவாளர் சங்கரநாராயணன் (தமிழ்நாடு) தியாகராஜா நிரோஷ் (யாழ்ப்பாணம் இலங்கை ஆகியோர் . கனடா- ஸ்காபுறோவில் அமைந்துள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கு விஜயம் செய்து அங்கு வழிபாட்டு மன்றத்தின் சக்திகள் மற்றும் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா ஆகியோரால் வரவேற்கப்பெற்றனர்.
முதலில் வழிபாட்டு மன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
அவர் தனது உரையில் “நாம் அனைவரும் இறை பணியிலும் சமூகப்பணியிலும் ஈடுபட்டு உழைத்த வரும் பெரியோர்களை மதித்து அவர்கள் கூறுகின்ற நற்கருத்துக்களை பின்பற்றி இறையருள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவை பற்றி அறிந்து காள்ள வேண்டும் அடைய வேண்டும்” என்று கூறி அன்றைய விருந்தினர்கள் மற்றும் உதயன் ஆசிரியர் ஆகியோர் நற்பணிகளை ஆற்றிவருகினர் என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து வெளிநாட்டு விருதுகளைப் பெற்ற வெற்றியாளர்கள் இருவரும் அங்கு உரையாற்றினார்கள். அவர்களுக்கு சக்தி ஞானம்மா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.