இரண்டு வாரங்களுக்கு முன்னர் மார்க்கம் நகரில் விபத்தொன்றில் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரர்களின் தாயாரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கனடாவில் கடந்த 12-10-2022 அன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தைப் பூர்விகமாக கொண்ட தமிழர்களான ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த நிலையில் சம்பவத்தில் காயமடைந்த அவர்கள் தாயாரின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பாரிய வாகனம் ஒன்றை செலுத்தி வந்த சாரதி ஒருவனின் கவனயீனம் இந்த அன்புச் சகோதரர்களை அந்த இடத்திலேயே அதுவும் அவர்களது தாயாருக்கு முன்பாகவே உயிரிழக்கச் செய்தமை கனடாவெங்கும் சோக அலைகளை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது
இந்த மிகவும் கொரூரமான வாகன விபத்து மார்க்கம் நகரில் எல்சன் மற்றும் மார்க்கம் நகரில் இடம்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
அந்த விபரத்தில் பாரிய ட்ரக் வண்டி ஒன்றும் தமிழக் குடும்பம் ஒன்று பயணித்த கார் ஒன்றும் மோதி நடந்த விபத்தில் பதீரனா புவேந்திரன் (21) மற்றும் அவரின் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் (23) இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்களின் தாய் ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடச்சியாக சிகிச்சை வழங்கப்பட்ட பராமரிக்கப்பட்டு வருகின்றார். . இது தொடர்பில் உயிரிழந்த பதீரனாவின் உறவினர்கள் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பதீரனா மற்றும் நெலுக்சனாவின் மரணத்தை என்னால் நம்பமுடியவில்லை. சிகிச்சையில் உள்ள ஸ்ரீரதி தேறி வருகிறார், உடல்நிலை மேம்பட்டு வருகின்றது என மருத்துவமனை தெரிவித்ததாக கூறியுள்ளார்.