மன்னார் நிருபர்
(28-10-2022)
மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள சாவக்கட்டு மயானப் பகுதிக்கு நேற்றைய தினம் (27)கழிவு மண் ஏற்றி வந்த உழவு இயந்திர பெட்டிக்குக்குள் மண்ணுடன் வெடிக்காத நிலையில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் வேலை செய்த நபர் ஒருவரால் கண்ணிவெடி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவ்விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையின் தலைமையில் கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.