(மன்னார் நிருபர்)
(29-10-2022)
வடக்கு கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 90 ம் நாள் கவனயீர்ப்பு நிகழ்வு சனிக்கிழமை (29) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச ஸ்கந்தபுரம் சந்தியில் நடைபெற்றது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஸ்கந்தபுரம் சந்தியில் இடம் பெற்றது.இதன் போது பிரதேசத்தின் விவசாய சங்கத்தினர், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்.
எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை,பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, என கோஷங்களை எழுப்பியவாறு ஸ்கந்தபுரம் பொதுச்சந்தை முன்பாக தங்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.