– 89 வது நாள் ஆர்ப்பாட்டம் செங்கலடி களுவன்கேணி யில் முன்னெடுப்பு!
(28-10-2022)
“வடக்கு- கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் தொனிப் பொருளில் நடைபெறும் 100 நாட்கள் செயல் முனைவின் 89 ஆவது நாளான இன்று(28) மட்டக்களப்பு – செங்கலடி களுவன்கேணி பகுதியில் இடம்பெற்றது.
“வடக்கு- கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு” – ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் களுவன்கேணி பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இதன்போது அங்கு திரண்டிருந்த மக்கள் “எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்”, “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “நடமாடுவது எங்கள் உரிமை”, “பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை”, “ஒன்று கூடுவது எங்கள் உரிமை”, “எங்கள் நிலங்களை அபகரிக்காதே” போன்ற பல கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பினர்.
பதாகைகளை ஏந்தியவாறு கவணயீர்ப்பில் ஈடுபட்ட இவர்கள் களுவண்கேணி குளணி பொதுக் கட்டிடத்தில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணியாக களுவண்கேணி குளணி சந்தி வரை சென்றனர்.
பெண்கள் அமைப்புக்கள், காணாமல் போனோரின் உறவுகள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.