ஜெகதீ்ஸ்வரன் பிரஷாந்த்
முல்லைத்தீவு மாவட்ட செயலக நடப்பாண்டின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று(01) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.
கணக்காய்வு முகாமைத்துவ குழு அமைப்பாளரும், மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளருமான கே.லிங்ககேஸ்வரனின் ஏற்பாட்டில மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயற்பட்டுவருகின்ற மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களின் உள்ளகக் கணக்காய்வு அவதானங்கள், நிதி செயற்பாட்டு முன்னேற்றங்கள், கணக்காய்வு ஐய வினாக்கள், அவற்றுக்கான பதிலளித்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் கடந்த கால கூட்ட அறிக்கை, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலிலானது குழு உறுப்பினர்களான மாவட்ட செயலக பிரதம கணக்காளர்ம.செல்வரட்ணம், கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் ஜெயசேகர பத்திரங்க சுனில் ஆகியோர் நேரடியாகவும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்ளகக் கணக்காய்வாளர் கே.ஏ.டி வசந்த குமார, மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர் A.ஆதவன் ஆகியோர் இணையவழி செயலி ஊடான பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
மேலும் இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி. வில்வராஜா, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மு.முபாரக், பிரதேச செயலாளாகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் குறித்த விடயங்களுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரடியாக கலந்து கொண்டிருந்தனர்.