(மன்னார் நிருபர்)
(01-11-2022)
‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் மடு கல்வி வலத்திற் குற்பட்ட மன்- அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை 11 மணியளவில் மர நடுகை திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகள்,அடம்பன் பொலிசார்,பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.
இதன் முதன்மையான வி டயமாக இலங்கையின் தேசிய மரமான நாக மரத்தை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.