(மன்னார் நிருபர்)
(01-11-2022)
மன்னார் மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும்,சமூக சேவையாளருமான அமரத்துவம் அடைந்த சட்டத்தரணி அமரர் அம்புரோஸ் சைமன் ஜோண் தாசன் என்பவரின் பெயரில் மன்னாரில் இன்று (1) செவ்வாய்க்கிழமை காலை வீதி ஒன்றுக்கு பெயர் சூட்டப்பட்டு பெயர்ப்பலகை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-மக்களின் கோரிக்கைக்கு அமைவாகவும்,மன்னார் நகரசபை அமர்வில் உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும்,சமூக சேவையாளருமான அமரத்துவம் அடைந்த சட்டத்தரணி அமரர் அம்புரோஸ் சைமன் ஜோண்தாசன் என்பவரின் பெயரில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, முதலாம் குறுக்குத் தெருவிற்கு ‘அமரர் அம்புரோஸ் சைமன் ஜோண் தாசன் ‘ என பெயர் சூட்டப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன்,நகர சபையின் செயலாளர்,உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
-குறித்த வீதியின் பெயர் பலகையை அமரர் அம்புரோஸ் சைமன் ஜோன் தாசன் அவர்களின் புதல்வன் சிரேஷ்ட சட்டத்தரணி ஜோண் தாசன் துசித் வைபவ ரீதியாக திரை நீக்கம் செய்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.