கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவரும் எழுத்தாளரும் கவிஞருமான அகணி சுரேஷ் அவர்களுக்கு சுவிற்சலாந்தில் ‘நிறைதமிழ்’ பட்டம் வழங்கப்பெற்றது
சுவிற்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் கணிதக் கற்கை நெறி மையத்தின் நிறுவன அதிபர் மகேந்திரன் அவர்களின் தலைமையில்,கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஷ் அவர்களின் நூல்கள், பாடல்கள் என்பவற்றின் அறிமுக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எழுத்தாளர் கல்லாறு சதீஷ் உரை நிகழ்த்தும்போது; புலம்பெயர் தமிழர்களின் தலையாய சமூகமாகக் கனடாத் தமிழ்ச் சமூகம் திகழ்வதாகவும்,ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்துக்கும் புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஆதாரசக்தியாகத் விளங்குகிறது”என்றும் கூறினார்.
பன்னிரெண்டு நூல்களை எழுதி,எட்டு உலக சாதனைகளை நிகழ்த்தி,பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியில்பட்டாதாரியாகவும்,பிரித்தானியாவில் கண ணித்துறையில் முதுமாணியாகவும் பட்டம் பெற்று விரிவுரையாளராக விளங்கும் அகணி சுரேஷ் அவர்களை மிகவும் தகுதியும்,பெறுமதியும் கொண்ட மனிதர் என்று பாராட்டிய எழுத்தாளர் கல்லாறு சதீஷ் ,சுவிஷ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் சார்பாக “நிறைதமிழ்” என்று பட்டம் வழங்கிக் கெளரவித்தார்.
மேலும் பேர்ன் வள்ளுவன் பாடசாலையின் அதிபர் முருகவேள் ,அகணி சுரேஷின் மொழிசார் ஆற்றல்களைப் பாராட்டியதுடன் பொன்னாடை போற்றிக் கெளரவித்தார் மற்றும் ரதி கமலநாதன்,விமலா ஆகியோரும் வாழ்த்துரை வழங்க மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற விழா இனிதே நிறைவடைந்தது.