CUPE தொழிற்சங்கமானது அவர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தால், அவர்கள் சட்டத்தை மீறியவர்களாக கருதப்படுவார்கள்
ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் பெற்றோர் சமூகத்திற்கு விடுத்துள்ள அறிக்கை
ஒன்றாரியோவின் CUPE தொழிற்சங்கமானது அவர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தால், அவர்கள் சட்டத்தை மீறியவர்களாக கருதப்படுவார்கள்.
இன்று வியாழக்கிழமை கூட, CUPE தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் தாங்கள் ஆரம்பிக்கப்போகும் வேலைநிறுத்தங்கள் மற்றும் இடையூறுகளை பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எடுக்க மறுத்தார்கள் நியாயமற்ற சம்பள மற்றும் சலுகைகளை மக்களின் வரிப்பணத்திலிருந்து அவர்கள் ஏதிர்பார்த்தினர். தற். ஒன்றாரியோவின் இரண்டு மில்லியன் மாணவர்களுக்காக.வகுப்பறைகளைத் திறந்து வைக்க, அவர்கள் எம்மை அனுமதிக்கவில்லை. மாணவர்களை இடைநடுவில் விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இதை பெற்றோர் உணரவேண்டும்
இவ்வாறு வியாழக்கிழமை மாலை ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் ஸ்ரிபன் லெச்சே அவர்கள் ஒன்றாரியோ வாழ் பெற்றோர் சமூகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்படும் பாடசாலை பணியாட்களின் வேலைநிறுத்தம் தொடர்பாகவே அவர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளார்
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:_ தொழிற்சங்கத்தோடு பேச்சுவார்தை நடத்திய எல்லா சந்தர்ப்பத்திலும் , நாங்கள் ஒரு வாக்குறுதியை அளித்தோம்: ஒன்றாரியோ பாடசாலை மாணவர்களை வகுப்பில் கற்கும் வண்ணம் வைத்திருக்க தேவையான அனைத்தையும் செய்வோம். நாங்கள் செய்வோம் அந்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள். என்று.
ஆனால் . ஏறக்குறைய 50 சதவீதம் ஊதிய மற்றும் சலுகைகளின் அதிகரிப்பைக் கோரிய பிறகு, CUPE ஏம்மை அச்சுறுத்தியது
.
நாம் அவர்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அப்போதிருந்து, நாங்கள் மேஜையில் சந்தித்து பேசிக்கொண்டே இருந்தோம். கடைசி நிமிடம் வரை, நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் இருந்தோம்
நியாயமான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் எடுக்க முயன்றோம்.
ஆனால் எல்லா நேரத்திலும், CUPE தொழிற்சங்கமானது வேலைநிறுத்தங்கள் மற்றும் இடையூறுகளை நிறுத்த மறுத்தது.
இன்றும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தைகளின் போது கூட, CUPE தொழிற்சங்கமானது. வேலைநிறுத்தங்கள் மற்றும் இடையூறுகளை தவிர்ப்பதில முடிவு எடுக்க மறுத்தது. இந்த வேலை நிறுத்தத்தின் மூலம்.
ஒன்டாரியோவின் இரண்டு மில்லியன் மாணவர்களை இந்த தொழிற்சங்கம் நடுத் தெருவில் விட்டு விட்டது வேறு வழியின்றி மாணவர்களை வகுப்பில் கற்கும் சட்டத்தை நாம் கையில் எடுக்க வேண்டியே உள்ளது
நாங்கள் இன்று இறுதி பேச்சுவார்த்தைக்கு வந்தது ஏமாற்றம் அளிக்கிறது. எல்லா நேரத்திலும் நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவோம் என்றுதான் நம்பினோம் மாணவர்களுக்கான உரிமை, பெற்றோருக்கான உரிமை, தொழிலாளர்களுக்கான உரிமை மற்றும் வரி செலுத்துவோர் உரிமை. ஆகியவை பற்றி தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தோம்
ஆனால் CUPE தொழிற்சங்கம் அசையவே இல்லை.. அவர்கள் பேச்சுவார்த்தையின் போது வேலைநிறுத்தத்தை கைவிட மறுத்துவிட்டனர். எனவே நான் அமைச்சர் என்ற வகையில்
நான் ஒன்றை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
CUPE அவர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தால், அவர்கள் சட்டத்தை மீறியவர்கள் என்றே கருதப்படுவார்கள்’ இவ்வாறு ஒன்றாரியோவின் கல்வி அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
All along, we made a promise: to do whatever it takes to keep kids in class. We will keep that promise. Let’s remember why we’re here. After demanding a nearly 50 per cent increase in compensation, CUPE threatened to
strike.
Since then, we’ve been at the table. Right up to the last minute, we’ve made good faith efforts to reach a fair deal.
But all along, CUPE refused to take strikes and disruption off the negotiation table. Even today, CUPE refused to take strikes and disruption off the table. For the sake of Ontario’s two million students…to keep classrooms open, they’ve left us with no choice but to pass the Keeping Students in Class Act.
It’s disappointing that we got here. All along we had hoped to reach an agreement that’s right for students, right for parents, right for workers and right for taxpayers. But CUPE wouldn’t budge. They refused to take a strike off the table. I want to make something very clear. If CUPE continues with their strike, they will be breaking the law