மார்க்கம்-தோர்ன்ஹில் உறுப்பினர் திரு லோகன் கணபதியின் தொகுதிக் கழகம் நடத்திய நிதி சேர் இராப்போசன விருந்து
Ontario’s Attorney General Hon. Doug Downey was the Chief Guest of the event and he met each and every guest and invitee of the night.
கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் உறுப்பினரும் மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியின் உறுப்பினருமான திரு லோகன் கணபதி அவர்களின் தொகுதிக் கழகம் நடத்திய வருடாந்த நிதி சேர் இராப்போசன விருந்துபசாரம் நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு மார்க்கம் நகரில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக ஒன்றாரியோ மாகாணத்தின்நீதி அமைச்சரும் சட்ட மா அதிபருமான Hon. Doug Downey அவர்கள் கலந்து கொண்டு லோகன் கணபதி அவர்களை பாராட்டி உரையாற்றினார். அங்கு கலந்து கொண்ட ஏனைய மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் மார்க்கம் நகரசபையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பெற்ற அங்கத்தவர்களும் திரு லோகன் கணபதி அவர்களின் சேவைகளை பாராட்டினர். அவர் மார்க்கம் நகரசபை அங்கத்தவராக இருந்த காலத்தில் ஆற்றிய மக்கள் சேவையைப் போன்றே மாகாணப் பாராளுமன்றத்திலும் தனது சேவையை ஆற்றி வருவதாக புகழாரம் சூட்டினார்கள்.