அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK) அமைப்புக்களின் நிதியீட்டத்தில் மேற்படி பயிற்சி, இரண்டாவது தொகுதி ஆசிரியர்களுக்காக புத்தளம் புனித மரியாள் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஒக்ரோபர்
28,29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.இப்பயிற்சியில் புத்தளம் பிரதேசம் சார்ந்த கற்பிட்டி, புத்தளம் வடக்கு மற்றும் தெற்கு கல்வி கோட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் 21 பாடசாலைகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் இப் பாடசாலைகளில் கற்றுக்கொண்டிருக்கும் 4360 சிறார்களின் சிறப்பான கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டுக்கு இது வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
இரு நாட்கள் கொண்ட இப்பயிற்சி Regional English language Supporting Centre இல் கடமையாற்றி ஓய்வுபெற்ற சிறந்த வளவாளர்களான திருமதி கே.பெனடிக்,திரு.சி.தயாகரன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
இப்பயிற்சியில் வகுப்பறை ஆங்கில பிரயோகம், சொல்களஞ்சியம் (vocabularies ) மற்றும் சொற்தொடர்கள்(phrases)அடங்கிய 16 கருப்பொருட்களுடனான(themes)செயற்படுசார் பயிற்சி வழங்கப்பட்டது.இதனூடு ஆசிரியர்கள் கவர்ச்சிகரமான சுவரொட்டிகளை காட் சிப்படுத்தியதுடன் zig-zag ஆக்கங்களுடனான கதை சொல்லும் நுட்பங்களைப்பயன்படுத்தி தமது திறமைகளை வெளிபடுத்தியது சிறப்பாக அமைந்திருந்தது.
இப்பயிற்சியின்போது ஆசிரியர்களுக்கு தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட துணை வழிகாட்டல் கைநூல்கள்,16 கருப்பொருட்கள் அடங்கிய லெமினேற் செய்யப்பட்ட கண்கவர் படங்கள் கொண்ட பொதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் ABOE செயற்பாடுகள் பதிவேற்றம் செய்யப்பட்ட விரலிகள் மற்றும் பயிற்சியின்போது பயன்படுத்துவதற்கான காகிதம் மற்றும் எழுதுபொருட்களும் வழங்கப்பட்டிருந்தன.
இப்பயிற்சி அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் வதிவிட பணிப்பாளரும் முந்நாள் வலயக் கல்விப்பணிப்பாளருமாகிய திரு.சு.கிருஷ்ணகுமார் அவர்களினால் நெறிப்படுத்தப் பட்டிருந்ததுடன் அடுத்த கட்ட பயிற்சிகள் மட்டக்களப்பு மேற்கு மற்றும் தென்மராட்சி கல்வி வலயங்களில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.