(9-11-2022)
அம்பாறை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் பாடசாலை அதிபர் மற்றும் மாணவிகள் மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் உடனடியாக இடமாற்றக் கோரி பாடசாலைக்கு முன் இன்று புதன்கிழமை (09) காலை பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பாடசாலையில் இடம்பெற்று வரும் நிர்வாக சீர்கேட்டினால் நேற்று (9) இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்துதள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்படுவதையிட்டு பெற்றோர்கள் பாடசாலைக்கு முன் இன்று காலை 8 மணிக்கு ஒன்றினைந்தனர்.
இதன் போது பாடசாலையின் நிர்வாக சீர்கேடே மாணவனின் உயிரை பறிக்க காரணம், கல்வி அமைச்சே பொருத்தமான அதிபரை நியமி,வெளியில் மதுபானம் விற்பவர் பாடசாலை சிற்றுண்டி விற்பதா?, தேசிய பாடசாலையை நாசம் செய்ய வந்த கூட்டமே வெளியேறு, அன்று ஏழைகளின் கஞ்சிப்பானையில் அடித்தவன் இன்று கல்வியை அழிக்க வந்ததா?. பாலியல் சீண்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா?.
பாடசாலைக்கு வந்து கல்வி புகட்டாத பாதகர்களே வெளியேறு, அண்ணன் தம்பி உறவு சாகவாசம் அன்னை கல்வியை அழிப்பதா? போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு சுமார் ஒருமணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.