ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறை அங்குரார்பண நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி. வியானிரோஸ் தலைமையில் கடந்த சனிக்கிழமை (05.11.2022) இடம்பெற்றது.
அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) மற்றும் இரட்ணம்; அறகட்டளை நிறுவனங்களின் பூரண நிதியொதிக்கீட்டில் இந்த திறன் வகுப்பறையானது மாணவர்களின் பயன்பாடிட்காக வழங்கிவைகப்பட்டது.
இந்நிகழ்வில், அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திருமதி. எ.சத்தியேந்ரா, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஜி.செண்பகவள்ளி, கோட்ட கல்வி பணிப்பாளர் திரு சிவகுமார், மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், IMHO நிறுவன திட்ட பணிப்பாளர் திரு கந்தையா விக்னேஸ்வரன் மற்றும் IMHO நிறுவன உத்தியோகஸ்தர்கள்,அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த திறன் வகுப்பறையூடாக லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விப் பயில்கின்ற 550 மாணவர்கள் மற்றுமன்றி அயல் பாடசாலை மாணவர்களும் பயன்பெற முடியும் என வலய கல்வி பணிப்பாளர் தனது உரையில் தெரிவித்தார். மேலும் தனது உரையில் மாணவர்களின் தேவைகளை அறிந்து இவ்வாறான திறன் பலகையினை வழங்கிவருகின்ற IMHO மற்றும் இரட்ணம் அறகட்டளை அமைப்புகளுக்கு தனது வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் தனது பாடசாலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தினமாக இன்றைய தினத்தினை தாம் கருதுவதாககவும் மாணவர்களின் நவீன கற்றல் தேவைக்காக வழங்கியது மிகவும் போற்றத்தக்கது என்று தெரிவித்தார்.
சில மாணவர்கள் இவ்வாறான திறன் வகுப்பறை இன்றைய நவீன கணினி மயமான கற்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் இவ்வாறான திறன் வகுப்பறையினை தமது பாடசாலைக்கு வழங்கியமைக்கு IMHO மற்றும் இரட்ணம் அறக்கட்டளை அமைப்புகளுக்கு பாடசாலை சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவிப்பதாகவும்; இந் திறன் பலகையினை பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளை பாடசாலைக்கு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர்.