(14-11-2022)
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,வடமாகாண ஆளுநரின் நிதி உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு நேர பால் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மடு கல்வி வலயத்தில் இன்று திங்கட்கிழமை(14) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் நிதியின் கீழ் முன்னெடுக்கும் குறித்த செயல்திட்டத்தை மடு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் ம.வி பாடசாலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மடு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 23 பாடசாலைகளைச் சேர்ந்த 1338 மாணவர்கள் குறித்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்வி பணிப்பாளர்,திணைக்கள அதிகாரிகள்,ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.