கடுகதி குடிவரவு நுழைவு முறையின் கீழ் கனடாவில் முக்கிய துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு 16 புதிய தொழில் தறைகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என கனடிய குடிவரவு மற்றும் அகதிகள் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பெற்றுள்ளது. கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கிடைக்கப்பெற்ற இந்த அறிக்கையில் வெளிநாடுகளில் வாழும் தகுதியான விண்ணப்பதாரிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் சுகாதாரப் பாதுகாப்பு, கட்டுமானம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்ப்பது: 16 புதிய தொழில்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிரந்தர வதிவிடத்திற்கு இப்போது தகுதியுடையவர்களாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது
ஒட்டாவாவில் இந்த விடயம் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.
” கனடாவிற்கு குடியேற்றவாசிகளை வரவேற்பது என்பது நமது சமூகங்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் மட்டும் நல்லதல்ல. இது அவசியமானதும் ஆகும் அதனால்தான், தற்பொழுது கனடா முழுவதும் உள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் வகையில் நமது பொருளாதாரத்திற்குத் தேவையான திறன்களைக் கொண்டு வரும் புதியவர்களை வரவேற்க கனடிய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சரான மாண்புமிகு சீன் ஃப்ரேசர், கடுகதி குடிவரவு நுழைவு முறையின் கீழ் நிர்வகிக்கப்படும் குடியேற்றத் திட்டங்களுக்கு தேசிய தொழில் வகைப்பாடு (NOC) 2021ஐ செயல்படுத்துவதாக நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்தார். புதிய NOC வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம், சுகாதாரப் பாதுகாப்பு, கட்டுமானம் மற்றும் போக்குவரத்து போன்ற உயர்-தேவைத் துறைகளில் உலகளாவிய திறமைகளைக் கொண்டுவர கனடாவை அனுமதிக்கும்.
மருத்துவ தாதியர்கள் உதவியாளர்கள், நீண்ட கால பராமரிப்பு உதவியாளர்கள், மருத்துவமனை உதவியாளர்கள், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் உதவியாளர்கள் மற்றும் போக்குவரத்து டிரக் ஓட்டுநர்கள் இப்போது கடுகதி விண்ணப்ப முறையில் சேர்க்கப்பட்டுள்ள 16 தொழில்களில் சிலவற்றின் உதாரணங்களாகும்.
கனேடிய தொழிலாளர் சந்தையில் அனைத்து வேலைகளையும் கண்காணிக்கவும் வகைப்படுத்தவும் NOC அமைப்பு பயன்படுத்தப்படுகிறது மற்றும் பொருளாதாரம் மற்றும் வேலையின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்படுகிறது. என்ஓசி அமைப்பில் மாற்றங்கள் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர வதிவிடத்திற்கான பாதைகளை விரிவுபடுத்துவதற்கான அமைச்சரின் உறுதிப்பாட்டை ஆதரிக்கின்றன, ஏனெனில் கடுகதி குடியேற்ற திட்டத்தின் கீழ் அடங்கும் தொழில் துறைகளுக்கு அதிக வேலைகள் தகுதி பெறும். இந்தப் புதுப்பிப்பின் மூலம், முன்னர் தகுதி பெறாத 16 தொழில் துறைகளில் அனுபவம் கொண்டவர்கள் இப்போது நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்கான திட்டத்தினால் பயனடையலாம்.
இது தொடர்பாக கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர்கௌரவ சீன் பிரேசர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்
“தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க எங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்துகிறோம், குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு, கட்டுமானம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில். இந்த மாற்றங்கள் இந்தச் சேவைகள் தேவைப்படும் கனேடியர்களுக்கு ஆதரவளிக்கும், மேலும் நமது பொருளாதாரத்தை வளமான எதிர்காலத்திற்கு முன்னோக்கி கொண்டு செல்ல நாம் சார்ந்து இருக்கக்கூடிய மிகவும் வலுவான பணியாளர்களை வழங்குவதன் மூலம் அவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவளிப்பார்கள். இந்த தேவையுடைய தொழிலாளர்களுக்கு கனடாவில் நிரந்தர குடியிருப்புக்கான விரிவாக்கப்பட்ட பாதைகளை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள தொழில் துறைகளாக பின்வருவன கனடிய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இந்த விண்ணப்பங்களை அனுப்பவதற்கு கனடிய அரசாங்கத்தின் இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
National Occupational Classification 2021
· An Immigration Plan to Grow the Economy
o Payroll administrators
o Dental assistants and dental laboratory assistants
o Nurse aides, orderlies and patient service associates
o Pharmacy technical assistants and pharmacy assistants
o Elementary and secondary school teacher assistants
o Sheriffs and bailiffs
o Correctional service officers
o By-law enforcement and other regulatory officers
o Estheticians, electrologists and related occupations
o Residential and commercial installers and servicers
o Pest controllers and fumigators
o Other repairers and servicers
o Transport truck drivers
o Bus drivers, subway operators and other transit operators
o Heavy equipment operators
o Aircraft assemblers and aircraft assembly inspectors