இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரச்சனைகளுக்குரியவராக தோற்றம் பெற்றுள்ள ரஷ்ய ஜனாதிபதியைத் தவிர்த்து ஏனைய உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்என்பது குறிப்பிடத்தக்கதாகும் அப்பொழுது இந்தோனேசியாவிலிருந்து ஒன்றாக உக்ரேன் அதிபருடன் இணைந்து உரையாடிய கனடிய மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள் தங்கள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்ததுடன் தங்கள் நாடுகளின் ஆதரவு தொடர்ந்து உக்ரேன் நாட்டுக்கு இருக்கும் என்றும் உறுதியளித்தனர்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை(Rishi Sunakai) சந்தித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau), உக்ரேன்ன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் ”நாங்கள் உக்ரைன் மக்களுக்காக உறுதியாக துணை நிற்கிறோம்” எனக் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, ‘பிரித்தானியாவில் ரஷ்யாவுக்கு எதிராக போராடும் உக்ரேனிய வீரர்களுக்கான எங்களின் பயிற்சிப் பணியை, கனடா அடுத்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கிறது’ கூறினார்.
இதுதொடர்பான வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ரிஷி சுனக்குடன்(Rishi Sunakai) அமர்ந்திருக்கும் ட்ரூடொ உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை செல்போனில் அழைத்து ”ஹலோ வோலோடிமிர்..ரிஷி மற்றும் ஜஸ்டின் நாங்கள் இணைந்து உங்களோடு பேசுகிறோம்” என்றார். இந்த சம்பவம் உக்ரேன் ஜனாதிபதிக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருப்பதாக அறியப்படுகின்றது