அன்பிற்கு இலக்கணமாய் அவணியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து
அனைவருக்கும் நல்லவராய் நாணயத்தை காத்தீர்
இடை நடுவில் வந்த இறைவனவன் ஏனோ
எம்மிடமிருந்து உமை நிரந்தரமாய் பறித்தான்?
துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாகி நின்று
அடைக்கலமும் தந்து நின்றீர் ஆண்டவன் ஏன் அழைத்தான?
காலனவன் தன் கணக்கை சாலவே செய்திட்டான்
மண்விட்டு நீரும் வானுலகம் சென்றீரோ?
விண்ணுலகம் சென்ற உம்மை நினைத்த வண்ணம்
கண்ணீர் சொரிந்து கரைகின்றோம் ஆற்றுவாரில்லை
ஆறுதல் சொல்லி சொற்களும் வரண்டே போயின
நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே
அன்பானவரே உம் பெயரும் அதுபோல நிலைக்கும்
கல்மனம் படைத்த காலனவன் கவர்ந்தானோ
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை என்றும் வேண்டுகின்றோம்
என்றும் உன் நீங்காத நினைவுகளுடன் உனது குடும்பம்
(905) 554-2433