கனடா வாழ் சமூக சேவையாளரும் ‘கனடா உதவும் பொற்சரங்கள்’ அமைப்பின் நிறுவனருமான திரு விசு கணபதிப்பிள்ளை மற்றும் ஈற்றொபிக்கோ பிராந்திய முது தமிழ் மன்றத்தில் முக்கிய பதவிகளை வகித்து சேவையாற்றிவரும் திரு நவரட்ணம் கருணாரட்ணராஜா ஆகிய இருவருக்கும் அண்மையில் இங்கிலாந்து மகாராணி ஞாபகார்த்த சேவைப் பதக்கம் வழங்கப்பெற்றது.
இந்த சேவையாளர்கள் இருவரதும் கடந்த கால பொதுச் சேவைகளைக் கௌரவித்தே இந்த கௌரவத்தை கனடிய அரசாங்கம் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் Hon Kirsty Duncan அவர்கள் அண்மையில் நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் வழங்கினார்கள்.
கனடா உதயன் நண்பர்களான திரு விசு கணபதிப்பிள்ளை மற்றும் திரு நவரட்ணம் கருணாரட்ணராஜா ஆகிய இருவருக்கும் கனடா உதயன் பத்திரிகை ஆசிரிய பீடத்தின் வாழ்த்துக்கள்-