மன்னார் நிருபர்
(21-11-2022)
மன்னார் மாவட்டத்திற்கான உதவித் தேர்தல் ஆணையாளராக வி. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் முன்னிலை இன்றைய தினம்(21) மதியம் மன்னார் மாவட்டத்திற்கான உதவி தேர்தல் ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிவராஜா அவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.