வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- ஆளும் வர்க்கத்தின் தொடர் வெற்றிகள்குறித்து அரகலயா உற்பட அணைத்துதரப்பினரும் சிந்தித்தாக வேண்டும்.
இன்று நாங்கள் நாளை நீங்கள். அந்த நாள் உங்களை நோக்கி இன்று வந்துள்ளது. அது பற்றி தமிழர்கள் புளங்காகிதம் அடைவதற்கில்லை.ஏனெனில் அதன் வலி தமிழர்களுக்குத் தெரியும். தமிழர்கள் பயங்கரவாதிகள்இ துரோகிகள்இ பிரிவிணைவாதிகள்இ தீவிரவாதிகள் என பல்வேறு முத்திரைகள் குத்தப்பட்டு அரச பயங்கரவாதத்தால் வேட்டையாடப்பட்டவர்கள்.
அவ்வேளைகளில் அரச தரப்புகள் கூறியதை தென்னிலங்கையின் பெரும்பாலானவர்கள் ஆமோதித்தனர்இ அங்கீகரித்தனர். இதே அரச பயங்கரவாதம் தம்மீது திருப்பப்படும் என்று தென்னிலங்கை மக்கள் அவ் வேளையில் எதிர்பார்க்கவில்லை.
இன்று அதே அரச பயங்கரவாதம் ‘மாற்றத்தைக்‘ கோரி நிற்பவாகளுக்கு எதிராக திசை திருப்பப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளுக்கு எதிராகவும்இ உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளுக்கு எதிராகவும்இ நாட்டைக் கொள்ளை அடித்தவர்களுக்கு எதிராகவும்இ நாடு வங்குரோத்து நிலை அடைய காரணமானவர்களுக்கு எதிராகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது பயங்கரவாத; தடைச் சட்டம் அமைதி காக்கின்றது.
எந்த பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மக்களை சீரழித்து சின்னா பின்னமாக்கியதோ அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் அகிம்சை வழிப் போராட்டக்காரர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதற்கு எதிராக வீதியில் இறங்கியுள்ள தென்னிலங்கை மக்கள் மீதும் பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு வேட்டையாடப்படுகின்றனர்.
தென்னிலங்கை மக்களுக்கு முன்பே தமிழ் மக்கள் அகிம்சை வழிஇ சத்தியாக்கிரகம் என அணைத்து வழிகளிலும் போராடி தோற்றுப் போனவர்கள். இன்று காலிமுகத் திடலில் அரகலயாக்கள் முகம் கொடுத்ததைவிட மிக மோசமான அனுபவங்களை தமிழ்த் தலைமைகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் அன்று சந்தித்தது. இது தமிழ் மக்களுக்குப் புதிய விடயம் இல்லை. கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் வரலாராக உள்ளது.
அன்று தமிழ் மக்கள் மீது பயங்கரவாதியென முத்திரை குத்திய பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் மீது துரோகிகள் என முத்திரை குத்துகின்றது. பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்றது.
- இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தத்தை மாத்திரமல்ல அணுகுமுறை குறித்தும் ஆழமாகச் சிந்தித்தாக வேண்டும்.
இந்த வரலாற்றில் தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல ஜேவிபி தற்போது அரகலயா உட்பட அணைத்துத் தரப்பினரும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தத்தை மாத்திரமல்ல அணுகுமுறை குறித்தும் ஆழமாகச் சிந்தித்தாக வேண்டும்.
இலங்கைச் சமூகத்தை வெற்றிகரமாக பிரித்து ஆள்கின்றனர்.இந்தப் பிரிவிணைக்குள் முரண்பாடுகளுகளுக்குள் மிக லாவகமாக வெற்றிகரமாக இவர்களால் தமது அரசியலை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடிகின்றது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது தமது அரசியலை தொடர்ந்தும் சந்தைப்படுத்தலில் வெற்றி கண்டுள்ளனர். அது மாத்திரமல்ல அரசியல் அதிருப்தியாளர்களை தமது அரசியல் வட்டத்திற்குள் இழுத்து செயல் இழக்கச் செய்வதிலும் வெற்றி கண்டுள்ளனர். தற்போதும்கூட அரகலய அலைக்குள் மூழ்கிய கையுடன் மீண்டு வந்து அரசியலில் தலை நிமிர்ந்து நிற்கின்றனர். தலை நிமிர்ந்து நின்ற அரகலயாக்கள் தடுப்புக்காவலிலும்இ; பொலிஸ் நிலையத்திலும்இ நீதிமன்ற வாசலிலும் நிற்கின்றனர்.இது எவ்வாறு அரகலய போராட்டத்தை அரசியல் ஆளும் வர்க்கம் திசை திருப்பி முதுகெலும்பை முறித்து கிடப்பில் போட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
- மாக்ஸியவாதிகள் தோற்றனர்
இலங்கை அரசியலில் மாக்ஸியவாதிகள் கோலோச்சிய காலம் இருந்தது. சுதந்திர இலங்கையில் படிப்படியாக வலதுசாரிகளால் மாக்ஷpயவாதிகள் ஓரங்கட்டப்பட்டு இன்று முகவரி அற்றவர்களாக சிவப்பு சாயம் கழன்று வேறு கலர்களுக்குள் கலந்துவிட்டனர். வலதுசாரி அரசியல் வெற்றிகரமாக மாக்ஷpய அரசியலை ஓரங்கட்டி தமது அரசியலுக்குள் இரண்டறக் கலக்க வைத்துவிட்டனர்.
– வர்க்க ரீதியில் இணைய வேண்டிய இலங்கையின் தொழிலாளர் வர்க்கம் ஏ.ஈ.குணசிங்க போன்றவர்களின் தொழிற்சங்க அரசியல் நலன்களுக்காக பலியாகி தெழிலாளர் வர்க்கத்தை இனரீதியாகக் கூறுபோட்டனர்.இது இலங்கையின் வலதுசாரி இனவாத அரசியலை பலப்படுத்தியது.
– ஒரு மொழி இரு நாடு இரு மொழி ஒரு நாடு என சித்தாந்தம் பேசிய சிவப்பு சட்டைக்காரர்களும் இறுதியில் சியப்பு சாயம் வெளுத்து நீலமாகவே பர்ணமித்தனர்.
– தென்னிலங்கையின் சிவப்ப சட்டைக்காரர்களுடன் பயணித்த தமிழர் தரப்பும் இந்த போக்கினை உணரத் தவறியது. 1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது தெற்கில் இருந்து வணக்கத்துக்குரிய போல்கெஸ்பஸ் போராசிரியர் சிறிவர்தன ஆகியோர் அடங்கிய குழுவினர் நல்லூர் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரையும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்தனர். யாழில் அவ்வேளையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் மண்ணைத் தூவிவிட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு நிறைவடைந்து வெளியேறியபோது மாஸக்கோ சார்பு மாக்ஷpயவாதி ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் ‘இந்தப் பிரச்சனைகள் அணைத்தும் வர்க்கப் புரட்சிக்குள் தீர்ந்துவிடும்‘ என்று நம்பிக்கை வெளியிட்டார். இதனை அவதானித்த இந்த பத்தியாளர் ‘தமிழர்களின் சாம்பலில்தான் வர்க்கப் புரட்சி சாத்தியமாகுமா? ஏன கேள்வி எழுப்பியதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
– 1958 1977 1983 என தொடர்ச்சியாக தமிழர்களின் சாம்பலைக் கண்ட தமிழினம் இறுதியில் முள்ளிவாய்க்காலைக் கண்டதை மறப்பதற்கில்லை.
– தமிழ் மாக்ஷpயவாதிகள் எவ்வாறு ஏமாந்தனரோ அதேபோன்று வலதுசாரித் தமிழ்த் தலைமைகளும் ஏமாந்தனர்.சேர்.பொன். அருணாச்சலம் சேர்.பொன்.இராமநாதன் ஈராக தமிழ்த் தலைமைகளும் ஏமார்ந்தனர்.அந்த வரலாறு இன்றும் தொடர்கின்றது.
– மறுபுறம் கேடப்ளியு.தேவநாயகம் லக்ஷ;மன் கதிர்காமர் தற்போது டக்ளஸ் தேவானந்தா வியாழேந்திரன் அங்கஜன் போன்ற பலர் தமிழர் தரப்பில் இருந்து பச்சைஇ நீலத்திற்குள் சங்கமமாகியுள்ளனர்.இவர்கள் தமிழ் மக்களின் குரலாக அன்றி சிங்களக் கட்சிகளின் குரலாகவே உள்ளனர்.சிங்களக் கட்சிகளுக்கு இவ்வாறானவர்கள் தேவை.ஆனால் இவர்களை சிங்கள ஆட்சியாளர்கள் இன விவகாரத் தீர்வுக்கு தமிழர் தரப்பாகக் கொள்வதில்லை.
- ஜேவிபி தோற்றது.
தென்னிலங்கை அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரமுயன்ற ஜேவிபிக்கு எதிராக இலங்கையின் ஆளும் வர்க்கத்துடன் இந்தியா கை கோர்த்து நின்றது. இறுதியில் ஆளும் வர்க்க அரசியல் நண்பர்கள் வெற்றி பெற்றனர்.தென்னிலங்கை இளைஞர்கள் தோற்றனர்.
ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து அரசியல் செய்ய வாருங்கள் என அழைத்தனர். இருக்கும் அரசியல் அமைப்புக்களுடன் போட்டியிட்டு மேல் எழுந்துவிட முயன்றும் சாண் ஏற முழம் சறுக்கம் நிலைதான் ஜேவிபியின் அரசியல் உள்ளது.
– சஜித் அணி போன்று பொதுஜன பெரமுன போன்று இளைஞர்களால் அரசியலில் மேலெழும்ப முடியவில்லை.
– – இப்பொழுதும் அரகலய திமிறி எழுந்தது. ஆனால் என்ன நடந்தது ஆளும் வர்க்கம் இணைந்து ஒரு வட்டத்தை வரைந்து அந்த வட்டத்திற்குள் அமர வைத்துவிட்டது. தற்போது தமது படைத் தரப்பை அனுப்பி அதன் சப்பாத்து கால்களுக்குள் அமர்த்திக் கொண்டிருக்கின்றது.
– தென்னிலங்கையின் ஆளும் வர்க்கத்திற்கெதிராக வடக்குக் கிழக்கில் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர். இறுதியில் இந்தியா உற்பட சர்வதேச சக்திகள் இலங்கையின் ஆளும் வர்க்கத்துடன் இணைந்து தமிழ் இளைஞர்களைத் தோற்கடித்தனர்.
இந்த வரலாற்றுப் பின்னணியில் இருந்து அரகலயாக்கள் ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். அரகலயாக்களின் போராட்டம் வீரியம் பெற்ற வேளை ரணில் விக்ரமசிங்க அரகலயாக்களுக்கு ஒரு செய்தியை விடுத்திருந்தார்.
- மாற்றத்தை எதிர்பார்க்கும் சக்திகளுக்கு எதிரானதாகவே வரலாற்றுரீதியாக ஆளும் வர்க்கம் இருந்துள்ளது.
ஆரகலயாக்கள் தமது அரசியல் அபிலாiஷகள் குறித்து கட்சி அமைத்து அமைப்பு ரீதியாக அணுக முன்வரவேண்டுமென செய்தி அனுப்பினார். அரகலயாக்கள் அரசியல் கட்சி அமைத்து தற்போதைய அரசியல் தலைமைகளுடன் பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்புவர் என எதிர்பார்த்தார்.ஆனால் அது நடைபெறாது போகவே மகிந்த அணியினர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தலைப்பட்டனர்.
இலங்கையின் வரலாறு மாற்றத்தை எதிர்பார்க்கும் சக்திகளுக்கு எதிரானதாகவே வரலாற்றுரீதியாக ஆளும் வர்க்கம் இருந்துள்ளது. இலங்கையின் ஆளும் வர்க்கத்தைப் பொறுத்து புரட்சி போராட்டம் எல்லாம் சரிவராது உங்களுக்கேற்ற சிஸ்டத்திற்கு இங்கு இடமில்லை. எங்களுடைய ‘ஜனநாயக சிஸ்டத்திற்குள்‘ வாருங்கள். ஏன்பததான் அந்தச் செய்தி.
ஆனால் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கூறுகின்ற சிஸ்டம் தோற்றுப் போனதன் விளைவே தென்னிலங்கை மக்கள் மாற்றத்தைக் கோரி நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தை ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொள்ள மறுத்து அடங்க மறுக்கின்றது.
இலங்கையின் பொருளாதாரம் எந்தளவுக்கு மோசமாக இருக்கின்றதோ அதை விட மோசமாக இலங்கையின் அரசியல் உள்ளது.மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி.தோற்றுப்போன நாட்டை உருவாக்கி விட்டு எவ்வித பொறுப்புக் கூறலும் இன்றி ஆட்சியில் அமர்ந்துள்ள ஆட்சியாளர்.
எனவேதான் சட்டங்கள் ஒரு நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு மட்டுமே அதிகாரம் அளிக்கிறது. அத்தகைய அதிகாரம் ஒரு குழு அல்லது ஒரு நபருக்கு வழங்கப்படுவது நாட்டின் முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே நமக்கு மாற்றம் தேவை. நாம் விரும்பும் மாற்றம் உண்மையான ஜனநாயகத்தை அனுமதிக்கும் புதிய அரசியலமைப்பை உறுதிப்படுத்த வேண்டும்.என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ உலகப் போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார ஒழுங்குமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும்இ 2023 வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக இலங்கை இந்தப் புதிய பாதையில் இறங்கும் என்றும் குறிப்பிட்டார். 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொருளாதார ஒழுங்குமுறை செல்லுபடியாகாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ‘நாட்டை புதிய பொருளாதார ஒழுங்கை நோக்கி அழைத்துச் செல்வதே இப்போது எங்களின் நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் அந்த புதிய ஒழுங்கில் தென்னிலங்கை மக்கள் பேசுகின்ற மாற்றம் குறித்த கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை.ஊழல்வாதிகளுடனும் நாட்டைக் கொள்ளை அடித்தவர்களுடனும் இணைந்து இது சாத்தியமா ? தன்னையோ தானும் தான் சார்ந்தவர்களும் உருவாக்கிக கொண்டுள்ள மக்கள் மற்றும் நாட்டுக்கு விரோதமான கட்டமைப்புடன் ‘நாட்டை புதிய பொருளாதார ஒழுங்கை நோக்கி அழைத்துச் செல்வது சாத்தியமா?
மொத்தத்தில் வரலாற்றில் இருந்து புதிய பாடத்தைக் கற்றுக் கொள்ள இலங்கையின் ஆளும் வர்க்கம் மறுக்கின்றது. இதனை இலங்கையின் அணைத்து சக்திகளும் உணர்ந்தாக வேண்டும். இது உணரப்படாதவரை இலங்கையில் மாற்றம் என்பது கானல் நீரே.
vathevaraj@gmail.com