கனடா எனுமோர் கனிவுறு தேசம்.
இனவெறி இல்லா இனிப்புறு தேசம்
வனவளம் எங்கும் வளர்ந்து இருந்து
கனமாய் வருமதி கொண்டது.
பல்லின மக்களும் பரந்து வசிக்கிற
தொல்லை அகன்ற சுதந்திர பூமியே!
அல்லும் பகலுமே ஆலைகள் ஓடிட
செல்வம் கொழிக்கும் சிறப்பு.
வந்தோரை ஆதரிக்கும் வண்ணத் தலமது
நொந்தோர் பிணிகளை நீக்கிடும் தேசமாம்
சொந்தம் அறுந்தோர் சுகம்பெறு நாடிது
சந்தம் வருமெனச் சாற்று.
கல்வி வசதியும் காணி உரிமையும்
பல்வகை மக்களின் பண்புகள் காத்திடும்
பல்லோரும் போற்றும் பரப்பு நிலந்தனை
எல்லோரும் கூடியே ஏற்று.
அகதியாய் வந்த அனைத்து மனிதர்
சுகமாய் இருக்கச் சமத்துவம் ஈந்தே
தனத்துடன வாழ்விடம் தந்திடும் நாட்டை
வனப்புடன் வாழவே வாழ்த்து.
ஆக்கம் …….. கவிஞர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453.