மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் தரம் 1 மற்றும் தரம் 2 வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான மேற்படி பயிற்சி சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய வளாகத்தில் சென்ற வாரம் 19,20 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறியில் 34 பாடசாலைகளைச் சேர்ந்த 68 ஆசிரியர்களும் சேவைக்கால ஆலோசகர்கள் மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர்களும் பங்கேற்றிருந்தனர். இவர்களுக்கான பயிற்சிகள் RESC இன் ஓய்வுபெற்ற பயிற்சியாளர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சியின்போது ஆசிரியர்களுக்கான துணைநூல்கள்,பதிவேற்றம் செய்யப்பட்ட விரலிகள்,16 கருப்பொருட்களுடனான 130 பட அட்டைகள் கொண்ட பொதி மற்றும் காகிதாதிகள், எழுதுகோல்கள் வழங்கப்பட்டு செயற்படு சார் கற்றல்- கற்பித்தல் அணுகுமுறை பற்றிய விளக்கங்கள் வளவாளர்களினால் வழங்கப்பட்டிருந்தன.
இவ்வாறான ஆங்கில மொழி மேம்பாட்டுத் திட்டங்களை வடக்கு,வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் செயற்படுத்து வரும் ஐக்கிய அமெரிக்காவை தளமாக கொண்ட அனைத்துலக மருத்துவ நல அமைப்பும் (IMHO-USA)ஐக்கிய இராட்சியத்தை தளமாக கொண்ட இரட்ணம் பவுண்டேசனும்(Ratnam Foundation-UK) இப்பயிற்சிக்கான முழுமையான நிதிப்பங்களிப்பையும் வழங்கியிருந்தன. இவ்வாறான பயிற்சிகள் மேற்படி மாகாணங்களில் 550 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே இவ்வமைப்பால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.