பாராளுமன்றத்தில் ரணில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக அவர் உரை அமைந்தது
இலங்கை போன்ற நாடுகளில் ஹிட்லர் போன்ற கொடிய மனிதர்கள்போல எவரும் வர முடியாது
என்று பாராளுமன்றத்தில் தனது உரையில் தெரிவித்தார் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி.
நேற்று முன்தினம் இலங்கைப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அச்சமயத்தில் இலங்கையின் மக்கள் செல்வாக்கு இல்லாத ஜனாதிபதி என்ற பெயர்பெற்றுள்ள ரணில் அவர்களும் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி. தொடர்ந்த உரையாற்றுகையில் இராணுவத்தில் இருக்கும் தொழிலாளிகளின் பிள்ளைகளின் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து பட்டினியில் இருக்கும் மக்களின் தலையில் வைக்குமாறு கூறுவது நியாயமானதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பயங்கரமான கருத்தை வெளியிட்டார். மக்கள் உரிமைகளை கோரி வீதியில் இறங்கினால், அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இராணுவத்தை கொண்டு அடக்க போவதாக கூறினார். ஜனாதிபதியின் இந்த கருத்து முழு நாட்டு மக்களுக்கு செய்த அவமதிப்பு. இப்படியான கருத்தை வெளியிட்டிருக்கக்கூடாது என்பது எனது கருத்தாகும்.. மக்கள் ஆட்சி இங்கு மலர்ந்தவுடன் ஹிட்லர்களுக்கு இலங்கை போன்ற நாடுகளில் வாய்ப்பு கிடைக்காது.
மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி அவர்களுக்கு கஸ்டங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கிய காரணத்தால் தான் கோட்டாபய ராஜபக்ச துரத்தியடிக்கப்பட்டார் எனவும் ஹெக்டர் ஹப்புஹாமி மேலும் தெரிவித்துள்ளார்.