(மன்னார் நிருபர்)
(25-11-2022)
நானாட்டான் பிரதேசச் செயலக பிரிவின் இவ்வருடத்திற்கான (2022) சர்வதேச சிறுவர் தின விழா நேற்று வியாழக்கிழமை மாலை சூரிய கட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நானாட்டான் பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்த குமார் கலந்து கொண்டார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக மத தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் மரநடுகை,கலை நிகழ்வுகள் மற்றும் பெற்றோர்,சிறுவர்களுக்கான விளையாட்டுக்களும் இடம் பெற்றது.இதன் போது சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.