ஸ்காபுறோவில் திருமதி மகேந்திரன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ இயங்கும் ‘கனடா தமிழ்க் கலைக் கல்விச்சாலை’ நடத்திய இவ்வாண்டிற்குரிய ‘மருதம்’ பல்சுவைக் கலைவிழா அண்மையில் கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி விழாவில் இங்குள்ள பல்வேறு நுண்கலை ஆசிரிய ஆசிரியைகள் தங்கள் மாணவர்களின் இசை நடன மற்றும் வாத்திய இசை நிகழ்ச்சிகளை மேடையேற்றினர்.
இங்கு காணப்படும் படங்களில் மிருதங்க வித்துவான் குகேந்திரன் கனகேந்திரன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய சிறப்பு இசை நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்த குரு குகேந்திரன் கனகேந்திரன் அவர்கள் மற்றும் புகழ்பெற்ற வாத்திய இசைக் கலைஞர் பயாஸ் ஜவாஹிர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கௌரவிக்கப்படுவதையும். அத்தடன் கனடாவில் பல ஆண்டு காலம் இயங்கிவரும் ‘அமிர்தாலயா நுண்கலைக் கல்லூரி அதிபர் ஶ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமன் அவர்களின் மாணவிகள் வழங்கிய துர்க்கையின் சிறப்புக்களை எடுத்துக் கூறும் அழகிய நடனத் தோற்றங்களையும் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறுவதையும் காணலாம்.
இந்த ‘மருதம்’ வருடாந்த விழாவின் மூலம் சேகரிிக்கப்பெறும் நிதியானது வட இலங்கையில் வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் சேவை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியும் படங்களும்;_ சத்தியன்