ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற சாமிமலை கவரவில தேசிய பாடசாலைக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறை அங்குரார்பண நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. ஜெயபாலன் தலைமையில் கடந்த புதன்கிழமை (30.11.2022) இடம்பெற்றது.
பெருந்தோட்ட கல்விக்கான இணைப்பாளர் திரு. ஆ.பி.சந்ரசேகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO ) மற்றும் இரட்ணம்; அறகட்டளை நிறுவனங்களின் பூரண நிதியோதிகீடில் இந்த திறன் வகுப்பறையானது சாமிமலை கவரவில தேசிய பாடசாலை மாணவர்களின் பயன்பாடிட்காக வழங்கிவைகப்பட்டது.
இந்நிகழ்வில்,அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திருமதி. எ.சத்தியேந்ரா,ஐஆர்ழு நிறுவன திட்ட பணிப்பாளர் திரு கந்தையா விக்னேஸ்வரன், IMUO நிறுவனத்தின் பெருந்தோட்ட கல்விக்கான இணைப்பாளர் திரு. ஆ.பி.சந்ரசேகரன், IMUO நிறுவன உத்தியோகஸ்தர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த திறன் வகுப்பறை மூலமாக கவரவில தேசிய பாடசாலையில் கல்விபயில்கின்ற 570மாணவர்கள் இன்றைய நவீன கற்கையினை தடையின்றி இந்த திறன் வகுப்பறையின் மூலம்; கற்க முடியும் எனவும் இந்த திறன் வகுப்பறையினை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலமாக தேசியரீதியிலான பொது பரீட்சைகளில் சிறந்த பெருபேறுகளை பெற வேண்டும் என ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திருமதி. எ.சத்தியேந்ரா அவர்கள்; தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் தனது பாடசாலைக்கு என்ன தேவை என்பதினை அறிந்து இவ்வாறான திறன் வகுப்பறையினை மாணவர்களின் கற்றல் தேவைக்காக வழங்கியது மிகவும் போற்றத்தக்கது எனவும் எதிர்கால நவீன உலகினை மாணவர்கள் திறன் வகுப்பறையினை பயன்படுத்தி வெற்றிக்கொள்ள வேண்டும் எனவும் திறன் வகுப்பறையினை வழங்கிய IMHO மற்றும் இரட்ணம் அறக்கட்டளை அமைப்புகளுக்கு நன்றியினை தெரிவிப்பதாக தனது உரையில் தெரிவித்தார்.
சில மாணவர்கள் இவ்வாறான திறன் வகுப்பறை இன்றைய நவீன கணினி மயமான கற்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் இவ்வாறான திறன் வகுப்பறையினை தமது பாடசாலைக்கு வழங்கியமைக்கு IMHO மற்றும் இரட்ணம் அறக்கட்டளை அமைப்புகளுக்கு பாடசாலை சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவிப்பதாகவும்; இந் திறன் பலகையினை பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளை பாடசாலைக்கு பெற்றுத்தருவதகவும் தெரிவித்தனர்.