கலைப்பணியில் 57 ஆண்டுகளை நிறைவு செய்து 58 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் திருமறைக் கலாமன்றத்தின் தினம் நாளை மறுதினம் சனிக்கிழமை (03.12.2022 ) சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காலை 7.00 மணிக்கு இல.17,மார்ட்டின் வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் கலைஞானசுரபி தியான இல்லத்தில் நன்றி வழிபாடு இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து மு.ப.10.00 மணிக்கு இல.238 ,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் மன்ற அலுவலகம் அருகில் அமைந்துள்ள கலைத்தூது மணிமண்டபத்தில் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.இல.286,பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி சுகன்யா அரவிந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுகளுக்கு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பிரதம விருந்தினராகவும்,யாழ்ப்பாண பெட்டக நிழலுரு கலைக்கூட இயக்குநர் மா.அருள்சந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள். நிகழ்வில்
கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளின் நடனங்கள், கலைஞர் கெளரவிப்பு என்பனவும்,சிறப்பு நிகழ்ச்சியாக திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் வழங்கும் ‘ஏகலைவன்’ தென்கோடி நாட்டுக்கூத்தும் இடம்பெறவுள்ளது.