‘காலையில் எழுந்தால் தனது கட்சி உறுப்பினர்கள் என்ன திருகுதாளம் செய்திருப்பார்களோ’ என்ற கவலையுடன் தான் நான் எழும்புகிறேன்’ என்று ஸ்டாலின் கூறி முழுதாக 1 வாரம் கூட ஆகவில்லை. மீண்டும் தி.மு.க பெரும் சர்சையில் சிக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை 26ம் திகதி ராமேஸ்வரம் அருகே மண்டபம் அருகே பொலிசார் தீவிர சோதனைப் பணிகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தார்கள். அது பொலிசாருக்கு ஏற்கனவே கிடைத்த தகவல் காரணமாக ஓடும். கார் ஒன்றை அவர்கள் மறித்து சோதனை செய்தவேளை.
அதில் சுமார் 30 கொள்கலன்களில் கொக்கேயின் அடைக்கப்பட்டு இருந்தது. இது இந்திய மதிப்பில் 1620 கோடி என்கிறார்கள். அப்படி என்றால் 4 மடங்கால் பெருக்கிப் பார்த்தால் இலங்கை ரூபாவில், 6480 கோடி ரூபா ஆகும். இலங்கை பட்ஜெட்டை, 2 வருடம் கொண்டு செல்லக் கூடிய பணம். விசாரணையில், ராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம், இந்த போதைப்பொருள், இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனைக் கடத்தியவர்கள் இருவரும் ஆளும் தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழக்கரை நகராட்சி மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஜெய்னுதீன் (45), தற்போது ராமேஸ்வரம் 19 ஆவது தொகுதி உறுப்பினரான சர்ப்ராஸ் நவாஸ் (42) ஆகியோரை கைது செய்தனர். இதனை அடுத்து விசாரணைகளை மத்திய புலனாய்வுத் துறையினர் தற்போது கையில் எடுத்துள்ளார்கள். சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும், தி.மு.க உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோண்டத்தில் விசாரணை செல்கிறது.
இந்த போதைப் பொருட்கள் யாழ்பாணம் கொண்டு செல்லப்பட இருந்தது. பின்னர் இவை பாதுகாப்பாக கொழும்பு சென்று, அங்கே இருந்து கப்பல் மூலம் யாருக்கும் தெரியாமல் குறித்த ஒரு வெளிநாட்டுக்குச் அனுப்ப திட்டமிடப்பட்டதாக அறியப்படுகின்றது