ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் பிரதேச மக்களின் கால்நடை வாழ்வாதாரங்களை கடத்தி இறைச்சிக்கு பயன்படுத்திய இருவர் இன்றைய தினம் நட்டாங்கண்டல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
அண்மைக்காலங்களில் குறித்த பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களின் கால்நடை வாழ்வாதாரங்கள் காணாமல் போகின்றமையும், போலீசார் குறித்த சம்பவங்கள் தொடர்பில் அசண்டையீனமாக இருக்கின்றனர் என பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முனவைக்கப்பட்டு வரும் வேளையில் இன்றைய தினம் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது
கால்நடை உரிமையாளரினால் நட்டாங்கண்டல் போலீஸ் நிலையத்தில் தனது கால்நடை காணவில்லை களவாடப்பட்டுள்ளது என்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட நட்டாங்கண்டல் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்னநாயக தலைமையிலான போலீஸ் குழு, மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து போலீஸ் கான்ஸ்டபிள் ரத்னனாயக,பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயப்பிரியன், போலீஸ் கான்ஸ்டபிள் ஜெயதிலக மற்றும் பாண்டார ஆகிய பொலிஸ் குழு மேற்குறித்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அதே இடத்தை சேர்ந்த 17 மற்றும் 27 வயதுடைய இருவர் கைதாகியுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் நாளைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நட்டாங்கண்டல் போலீசார் தெரிவித்தனர்