கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் அதிகளவு உறுப்பினர்களின் ஆதரவைத் தொடர்ந்து தற்காலிக உடன்படிக்கையை எட்ட முடிந்தது மகிழ்ச்சி என்கிறார் ஒன்றாரியோ கல்வி அமைச்சர் மந்திரி ஸ்டீபன் லெச்சே
“பேச்சுவார்த்தைகள் தொடங்கியதில் இருந்து, எமது மாணவர்கள் வகுப்பில் இருந்து கற்க வேண்டும் என்ற நம்பிக்கையால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம். எமது மாணவர்கள் வகுப்பறைகளில் வைத்திருக்கும் மற்றும் கழகங்கள் மற்றும் மேலதிக பாடத்திட்டங்கள் போன்ற கற்றல் அனுபவத்தைப் பாதுகாக்கும் வகையில் தொழிற்சங்கத்தின் பெருமளவு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
இவ்வாறு ஒன்றாரியோ கல்வி அமைச்சர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள சுருக்கமான அறிக்கையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.