வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- நாட்டையும் மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
இலங்கை நாட்டையும் மக்களையும் படைத்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலையை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தோற்றுவித்துவிட்டனர்.
நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
சாதாரண மக்களை இந்த பொருளாதார நெருக்கடி சிறு நீரகங்களைவிற்று சீவியம் நடத்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
மறுபுறம் போதைவஸ்து மாபியாக்கள் நாட்டையே போதைக்குள் தள்ளி தமது பைகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இன்னொருபறம் மத்திய கிழக்கில் இலங்கைப் பெண்கள் நவீன அடிமைத்தனத்தில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.
1.ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையிட்ட பணத்தை நாட்டுக்கே திருப்பி வழங்க வேண்டும்.
- ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் இருந்துவெளியேற்றப்பட வேண்டும்.
3.ஊழல் மோசடி இல்லாத அரசும் அரசியல் கலாசாரமும்உருவாக்கப்பட வேண்டும்.
4.’அரசியல் சிஸ்டத்தில்‘ மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனஇளைஞர்களும் யுவதிகளும் வீதியில் இறங்கினர்.
இந்தக் கோஷங்களுடன் அணி திரண்ட இளைஞர்யுவதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வேட்டையாடப்படுகின்றனர்.
- அரசியல் எழுச்சிகள் சுற்றுலாவை பாதிக்கின்றன
அரசியல் எழுச்சிகள் சுற்றுலாவை மோசமாக பாதிக்கின்றன என்ற காரணத்தைக் காட்டி பொதுமக்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் நியாயப்படுத்துகின்றது.
அப்படியானால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன (SLPP )மற்றும் ஐதேக (UNP) என்பன ஏன் ஆட்சி மாற்றத்திற்காக கடந்தகாலங்களில் வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை விளக்குவார்களா? நியாயப்படுத்துவார்களா?
மகிந்த ராஜபக்ச நிர்வாகத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்களை நடத்தியதுஇ
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நடத்திய (SLPP) வெகுஜன எதிர்ப்பு போராட்டங்களின் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை சீர்குலைத்தது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட உடனேயேஇ அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களின் நலன்களைக் கவனிக்க ஒரு குழுவை நியமித்தார்!
ஆனால் தற்போது ஐ.தே.கவும் மொட்டுக் கட்சியினரும் (SLPP – UNP) இணைந்து;போராட்டக்காரர்களை நசுக்குகின்றனர்.
அமைதியான போராட்டங்களை விட, மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்க களின் தட்டுப்பாடு, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் போன்றவை சுற்றுலாவை அதிகம் பாதிக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் வாக்குமூலமே இதற்குச் சான்று.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு குடிக்க மருந்து இல்லை! இலங்கைக்கு செல்வதாக இருந்தால் உங்களுக்கான மருந்தை எடுத்துச் செல்லுங்கள்! என தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
- ‘நாஜிகள்’ மிரட்டல்
நடைமுறையில்உள்ளதண்டனையில்லா கலாசாரம்இ இங்குள்ள ‘நாஜிக்கள்‘ தங்கள் அரசியல் எதிரிகளை மிரட்டுவதற்காக வன்முறையை கட்டவிழ்த்துவிடத் துணிந்துள்ளதாகத் தெரிகிறதுஎன்று ஆங்கில் நாளிதல் ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
- தண்டனை திருடர்களுக்கல்ல மக்களுக்கே!
வெளி நாடுகளில் திருடர்கள் தண்டனைக்கு பயந்து வாழ்கிறார்கள் ஆனால் இலங்கையில் கொள்ளையடித்தால் அல்லது திருடினால் பயந்து வாழ வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதேவேளையில் ஏதும் தம்மால் நடைபெறவில்லை என்பதுபோல் நாட்டை நிமிர்த்த மக்கள் தியாகங்களைச் செய்ய முன்வர வேண்டுமென சாத்தான்களாக வேதம் ஓதுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
- மக்களை தற்கொலைக்குத் தள்ளும் வரி அதிகரிப்பு
பெருந்தொகையான பொதுச் செல்வங்களைத் திருடி நாட்டையே திவாலாக்கிவிட்டு பொருளாதாரக் குற்றங்களைச் செய்தவர்கள் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் அமைதியாக இருக்க பிறர் செய்த பாவங்களுக்குப் பாரிய அளவில் பணம் கொடுக்க வேண்டிய நிலையில் மக்களின் மடியில் இருந்து இழப்பை மீட்டெடுக்க இந்தச் சக்திகள் துடிக்கிறார்கள். கட்டணங்கள் மற்றும் வரிகளில் அதிகரிப்பு. உத்தேச வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் பலரை தற்கொலைக்குத் தள்ளும் நிலையே நாட்டில் உருவாகியுள்ளது.
- அரசியல் ஸ்திரத்தன்மை
அரசியல் ஸ்திரத்தன்மை என்பது பொருளாதார மறுமலர்ச்சிக்கு ஒரு முன்நிபந்தனை என்பது உண்மையே.
ஆனால் பொது மக்களின் எதிர்ப்புகளை அடக்குவதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கிவிட முடியாது.
அதேபோன்று, மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி நிவாரணம் கோரி நிற்கும்போது அரசியல்ஸ்திரமின்மையைஉருவாக்குவதுஎன்பதுகிட்டத்தட்டசாத்தியமற்றது; எனவே அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் முழு வீச்சில் இறங்க வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக ராஜபக்ச குடும்பம் ஐ.தே.கவும் மொட்டுக் கட்சியினரதும்; (SLLP – UNP) மற்றும்அவர்களதுகூட்டாளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்மும்முரமாக உள்ளனர்.
தன்னை ஹிட்லர் என்று அழைத்துக் கொள்ளும் ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை “பாசிஸ்டுகள்” என்று கண்டித்துள்ளார்!
மொத்தத்தில் ‘சிஸ்டம் சேன்ஜ்‘ வேண்டுமென போராட்டக் களத்தில் இறங்கிய தாம் போராட வீதியில் இறங்க முடியாதுள்ளதுடன் மிக மோசமாகப் பழி வாங்கப்படுகின்றோம் என வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.