ஜெகதீஸ்வரன் டிஷாந்த்
மாங்குளத்திலும் கால்நடை வைத்திய அதிகாரிகளினால் இறந்த கால்நடைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திலும் கால்நடை வைத்திய அதிகாரிகளினால் இறந்த கால்நடைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன
நேற்றைய தினம் மண்டோஸ் புயலின் தாக்கத்தினால் இறந்த கால்நடைகலுக்கு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அதன் மாதிரிகள் பிராந்திய கால் நடை வைத்திய அதிகாரிகளினால் எடுத்து வைக்கப்பட்டிருந்தன
நிலையில் இன்றைய தினம் அதனை எடுத்து செல்வதற்காக கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் பணிப்பாளர் நாயகம் டாக்டர் கேமாலி கொத்தலாவலவின் பணிந்துரைக்கமைய பேராதெனிய பல்கலை கழகத்தின் கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தின் குழு ஒன்று இது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக மாவட்ட விலங்கு புலனாய்வு நிலைய கால்நடை உற்பத்தி சுகாதார நிலையத்தின் மாங்குளம் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்