(மன்னார் நிருபர்)
(13-12-2022)
மன்னாரிற்கு நேற்று திங்கட்கிழமை (12) மாலை விஜயம் செய்த வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் , இந்தோனேசியா தூதுவர் தேவி குஸ்டினா,தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன் போலின் ஆகியோர் தலைமன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
-தலைமன்னார் சென்ற குறித்த தூதுவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு சென்று அங்கிருந்து மணல் திட்டுக்களை பார்வையிட சென்றனர்.
கடற்படையின் விசேட படகுகளில் குறித்த தூதுவர்கள் பாதுகாப்பாக தீடைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.