(மன்னார் நிருபர்)
(13-12-2022)
வங்காலை புனித ஆனாள் லிற்றில் பிளவர் பாலர் பாடசாலையின் 2022 ஆண்டிற்கான ஒளிவிழா மற்றும் சிறார்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வானது புனித ஆனாள் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி.ம.ஜெயபாலன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் சிறப்பான முறையில் நேற்று (12) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பெரிய கட்டு புனித.அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி.அன்ரனிற்றோ அருள்ராஜ் குரூஸ்,சிறப்பு விருந்தினராக புனித ஆனாள் ஆலய உதவி பங்குத்தந்தை அருட்பணி.பிரசாந்தன் , கெளரவ விருந்தினர்கள் அருட்சகோ.ராத்தி, வைத்திய அதிகாரி உதார டீல்விஸ்,சட்டத்தரணி .அ.வில்பரட் அர்யுன் மற்றும் அருட்சகோதரிகள், முன்னாள் கல்வி பணிப்பாளர் .ஆபேல் றெவல், உதவி கல்விப்பணிப்பாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள். முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், முன்பள்ளி இணைப்பாளர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், கிராமத்தின் முதியோர்கள், கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த பிரதம விருந்தினர் அருட்பணி.அன்ரனிற்றோ அருள்ராஜ் குரூஸ் தமது சிறப்புரையின் போது நாம் சிறுவர்களிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொள்வதோடு அவர்களுடைய எதிர்கால வாழ்விற்கு நாம் அனைவரும் ஒன்றினைந்து பயணிக்க வேண்டும் என்று கூறி இந் ஒளி விழா நிகழ்வின் ஊடாக இயேசுவின் அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்று கூறியதோடு இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடந்தேறியது.