(15-12-2022)
தலைமன்னார் துறை முகத்தை தொழில் துறைமுகமாக மாற்றுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவுடன், இதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதுளைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடிய போது, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இது தொடர்பான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்றது.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மினி சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.