பளை மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் “முத்தமிழ் அறிஞர்” அ.பொ செல்லையாவின் உருவச்சிலை திரைநீக்கமும், நூல் வெளியீடும் பாடசாலை அதிபர் உதயகுமார் தலைமையில் 09-12-2022 அன்று பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
பாடசாலை பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்ட உருவச்சிலையை தொழிலதிபர் வேலணை நா.வீரசிங்கம் திறந்து வைத்தார். கனடாவிலிருந்து திருமதி யோகரத்தினம் செல்லையா, அவரது புதல்வர் ‘தமிழன் வழிகாட்டி’ செந்தி ஆகியோர் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.