Scarborough North.. தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Hon. Shaun Chen – MP அவர்களால் பிரிட்டிஷ் மகாராணியின் சேவை ஞாபகார்த்த பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட அன்பர்கள்
கடந்த 11ம் திகதி; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் Scarborough North.. தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Hon. Shaun Chen – MP நடத்திய ஒரு அரச விருது வழங்கும் விழாவில் பிரிட்டிஷ் மகாராணியின் சேவை ஞாபகார்த்த பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட அன்பர்கள் சிலரை இஙகே காணலாம்.
நாடு கடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவு முக்கிய உறுப்பினர் மரியராசா. வர்த்தகப் பிரமுகர் தனா மாணிக்கவாசகர். சமூகசேவை நிறுவனத்தின் த லைமை அதிகாரி விஜயா குலா. பல்வைத்தியர் சபேசன் தங்கதுரை. கனடா ஶ்ரீ ஐயப்பன் தேவஸ்த்தானத்தின் முக்கிய தூண்களாக விளங்கும் ‘குருசாமிகள்’ சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் தம்பிராஜா அவர்கள் மற்றும் தமிழ்ப் பூங்கா’ தமிழ்ப் பள்ளி அதிபர் திருமதி யோகா அருள் ஆகியோர் உட்பட பலர் மேற்படி விருதுகளைப் பெற்றுக்கொள்வதைக் காணலாம்.