இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இவர் கைவிரலில் காயம் ஏற்பட்டதால் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
அதே நேரத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது. 2 வது ஒருநாள் போட்டி நடைபெற்ற போது ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சைக்காக இந்தியா திரும்பினார். 2 வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் டிசம்பர் 22 ம் தேதி தாக்காவில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியிலும், ரோஹித் சர்மா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரோஹித் சர்மா 2 வது டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரோஹித் சர்மாவிற்கு பதிலாக கே.எல். ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.