(மன்னார் நிருபர்)
(17-12-2022)
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையுடன் இணைந்து நடத்திய இளம் இந்துக் குரு மார்களுக்கான விசேட பயிற்சி பட்டறை இன்றைய தினம் சனிக்கிழமை (17) காலை மன்னார் உப்புக்குளம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட இந்து மத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் மற்றும் வளவாளர்களாக முனீஸ்வரன் ஆலய தர்மகர்த்தா வும் யாழ் பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பத்ம நாபசர்மா கணபதி ஹோமம் வழிபாடுகள் பற்றிய சிறப்பு உரையாற்றினார்.
இந்நிகழ்வானது காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரை இடம்பெற்றது.
இந்நிகழ்வின் ஒழுங்குகளை மன்னார் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருவாளர் இ. நித்யானந்தன் ஏற்பாடு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.