ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
முல்லைதீவு மாவட்டம் முறிகண்டி பகுதியில் கடந்த 12ம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச சபை சுகாதார பணியாளர் மீதான வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் (20-12-2022) மாங்குளம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்,
கடந்த 12ம் திகதி அன்று முல்லைத்தீவு முறுகண்டி பகுதியில் கடமையில் இருந்த பிரதேச சபை சாரதி ஒருவர் மீது குறிப்பிட்ட சிலவர் வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியிருந்தனர்
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள ஒலுமடு உப அலுவலகத்தில் பணியாற்றும் உழவு இயந்திரத்தின் சாரதியான 32 அகவையுடை மந்துவில் பகுதியை சேர்ந்த அன்ரன் பரமதாஸ் துசான் என்ற ஊழியரே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி மாங்குளம் பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
இதேவேளை குறித்த தாக்குதலை கண்டித்து கடந்த 13ம் திகதியன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மாங்குளம் போலீசார் சம்பவத்துடன் தொடர்புடைய கோணாவில் யூனியன்குளம் பகுதியை சேர்ந்த 23 வயது குடும்பஸ்தர் ஒருவரையும் ,கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரையும் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர் , இதேவேளை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாள் ஒன்றினையும் கைப்பற்றி இருந்தனர்
இதேவேளை நேற்றைய தினம் கைதாகிய இருவரையும் இன்று (21-12-2022) மாங்குளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் பணித்துள்ளது