ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
பெரண்டினா நிறுவனம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளில் இளையோர் அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையில் குறித்தி திட்டத்தின் கீழ் தையல், மின் இணைப்பாளர், அலுமினிய பிற்றிங், ஒட்டுவேலை, கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு உற்பத்தி முயற்சிகளின் கீழ் பயனாளிகளுக்கு பயிற்சியுடனான வாழ்வாதார உதவியினை வழங்கியிருந்தது.
பெரண்டினா நிறுவனம் 70வீதமும், பயனாளிகள் 30 வீதமான பணத்தொகையில் குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந் நிலையில், குறித்த சிறுதொழில் முயற்சியாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வியாபார பதிவு மற்றும் அடிப்படை நிதி தரவுகள் பதிவு தொடர்பான பயிற்சிப்பட்டறை இன்று(21) காலை 9.00மணிக்கு மாவட்ட செயலக முல்லைமணி பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் வளாவாளர்களாக மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் முயற்சியான்மை அபிவிருத்தி உத்தியோகத்தர் உ.தேவமலர் மற்றும் பெரண்டினா நிறுவன உத்தியோகத்தர் அரவிந் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பயிற்சிப்பட்டறையில் 31 சிறுதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.