என் இனிய உறவுகளே,
தமிழ் நாட்டிலிருந்து உங்கள் அனைவரையும் மற்றுமொருமுறை சந்திப்பதில் மகிழ்ச்சி.
வருடாவருடம் தமிழ்நாட்டுக்கு மார்கழி மாதத்தில் நடைபெறும் இசை விழாவையொட்டி வருவதோடு என் இஷ்ட தெய்வங்களின் ஸ்தலங்களையும் வணங்குவதுண்டு. அப்படி வணங்கும் போது என் உறவினர்,நண்பர்களுக்காக மட்டும் வேண்டுவதல்லாமல் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கும் உதவும்படி வேண்டுவதுண்டு. இரண்டு வருடங்களாக ‘கொவிட்’ காரணமாக வரமுடியாத நிலைமையில் இம்முறை திருச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாரையும் சென்று வணங்கினேன்.
பிள்ளையாரின் அருள் கிடைத்ததுபோல், ஒரு நண்பர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஒரு தொகையை தந்து உதவினார். வேர்ஜினியா -அமெரிக்கா – மாகாணத்தில் வாழும் ஒரு பரோபகாரர் Dr. ரஞ்சிதன் ரூ. 367,850. அனுப்பிய பணம் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து நன்றிக்கடிதம் கிடைக்கப்பட்டது. டாக்டர் ரஞ்சிதன் முன்பும் எமது அமைப்புக்கு உதவியது குறிப்பிடத்தக்கது . ( கடிதம் கீழே )
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உதவ விரும்புவோர் HELPWORA மூலமாகவோ அல்லது அந்த அமைப்புக்கு நேரடியாகவோ உதவலாம். பாதிக்கப்பட்டோருக்கு செய்யும் உதவி தெய்வத்துக்கு செய்யும் சமானமாகும் .( Serving the humanity is serving the God.)
நன்றியுடன்,
விக்டர் ராஜலிங்கம்.