ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
முல்லை. மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினரின் அனுசரணையுடன் 2022ம் ஆண்டுக்கான ஒளி விழா மாவட்டச் செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) செவ்வாய்க்கிழமை காலை 9.30மணிக்கு சிறப்புற இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது அளம்பில் பங்குத் தந்தை அருட்திரு. யூட் அமலதாஸ் அடிகளால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, பூசை வழிபாடுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஆசியுரை நிகழ்த்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் கரோல் கீதம் இசைக்கப்பட்டு, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் மற்றும் மறைக் கல்வி மாணவர்கள் ஆகியோரின் ஆளுமைகளை வெளிப்படுத்துகின்ற பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் சிறப்புற இடம்பெற்றன.
மேலும் இந் நிகழ்வில் இறுதியில், கலைநிகழ்வுகளை நிகழ்த்திய மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத் தலைவரும், மாவட்ட பொறியியலாளருமான எந்திரி S.கஜானந், கிளைத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.