கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஹேகர்ஸ்வில் என்னும் நகரத்தில் கடந்த செவ்வாய் கிழமை மதியம் கடமையில் இருந்தபோத சுட்டுக்கொல்லப்பட்ட 28 வயது ◌ாகாணப் பொலிஸ் உத்தியோகத்தர் Grzegorz Pierzchala, இனது மரணம் தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளள ஒன்றாரியோ மாகாண பொலிஸ் தலைமை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கொல்லப்பட்ட உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணத்தை தழுவிய அன்று தான் தனது 10 மாத தகுதிகாண் காலத்தை கடந்ததற்கான அறிவிப்பை தலைமை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்டதாகவும் இது தொடர்பாக அவர் மகிழ்ச்சியோடு தன் பணியைச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது அகால மரணம் தொடர்பாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடொ மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் ஆகியோர் இந்த படுகொலையானது தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்துள்ளதாகவும் இந்த கொலை கண்டிக்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்துள்ளனர்.
OPP எனப்படும் ஒன்றாரியோ மாகாண பொலிஸ் சபையின் முக்கிய அதிகாரிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் உத்தியோகத்தர் . Grzegorz Pierzchala, , ஹால்டிமண்ட் என்னும் கிராமப் புற நகரத்தில், மதியம் 2:30 மணிக்குப் பிறகு, ஒரு வாகனத்தை பரிசோதிக்க முனைந்த போது சுடப்பட்டு, பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிர் பிரிந்தது என்றும்
OPP பொலிஸ் சபையின் கமிஷனர் தோமஸ் கேரிக் அவர்கள் கூறுகையில், ஹால்டிமண்ட் என்னும் கிராமப் புறப் பகுதியில் உள்ள பொலிஸ் எல்லைப் பிரிவில் பணிபுரிந்த பியர்சாலா, கொல்லப்பட்ட உத்தியோகத்தர் வீதிப் பரிசோதனையின் போது கொல்லப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த சாட்சிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, 25 வயதுடைய ஆண் மற்றும் 30 வயதுடைய பெண் ஆகிய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் காயங்களுடன் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் ஆனால் சந்தேக நபர்களுடனான விசாரணைகளை மேற்கொண்ட போது பியர்சாலா தனது ஆயுதத்தை எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தவில்லை என்பது நிரூபுிக்கப்பட்டுள்ளது என்றும் கேரிக் தெரிவித்துள்ளார்
.கொல்லப்பட்ட இளைய வயது பொலிஸ் உத்தியோகத்தரின் இழப்பு தொடர்பாக கவலை தெரிவித்த மற்றுமொரு உத்தியோகத்தர் தனது செய்தியில் “இருபத்துஐந்து வயதில், அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த ஒரு மனிதர், மேலும் அவர் தனது கனவை நனவாக்கவும், எங்கள் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தன்னால் முடிந்ததைச் செய்யவும் ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தது,” என்று எப்போது கூறி வந்தார். கனேடிய ஆயுதப்படையின் உறுப்பினர் ஒருவர் கொலையாளியின் துப்பாக்கிச் சூட்டுக்கு. “துரதிர்ஷ்டவசமாக அவர் இன்று இரையாகிப் போய் மாபெரும் தியாகத்தையும் செய்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாய் மாலை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய OPP கொல்லப்பட்ட அதிகாரியைப் பற்றிப் பேசும்போது எட் சஞ்சுக் என்னும் உயர் பொலிஸ் அதிகாரி சற்று தடுமாறிய வண்ணம் திணறியபடி தனது கருத்துக்களைப் பகிர்ந்தார் என அறியப்படுகின்றது.
“நான் எனது பல வருட கால பொலிஸ் சேவையில். ஒருபோதும் எனது வார்த்தைகளை இழக்கவில்லை, ஆனால், இன்று நான் உண்மையில் வார்த்தைகளை இழக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
” கொல்லப்பட்ட இளம் பொலிஸ் உத்தியோகத்தர் பியர்சாலா துணிச்சல் மிக்கவர் அவர் ஒரு அற்புதமான அதிகாரி, , மேலும் நீங்கள் கற்பனை செய்யக்கூடிய மிகப்பெரிய தங்கத்தை ஒத்த தனது இதயத்தை வைத்திருந்தார்” என்று செவ்வாயன்று தொலைபேசி பேட்டியில் சஞ்சுக் என்னும் பொலிஸ் உயர் அதிகார் தெரிவித்தார்.
“இது எங்கள் (OPP) குடும்பத்திற்கு ஒரு தீவிர இழப்பு, இந்த அதிர்ச்சிகரமான இழப்பைச் சமாளிக்க நாங்கள் குடும்பத்திற்கும் எங்கள் அதிகாரிகளுக்கும் நிச்சயமாக எதிர்காலத்தில் உதவுவதற்கு காத்திருக்கிறோம்.”
மாலை 5:45 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஒன்றாரியோ மாகாண காவல்துறை அவசர எச்சரிக்கையை விடுத்தது, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பி ஓடுவதைக் காணப்பட்டதை அடுத்து, அவர்களில் ஒருவர் ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படுவதாகக் கூறி, அனைத்துப் பகுதிவாசிகளையும் தங்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டனர்
எனினும் மேற்படி இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மெற்படி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு யார்க் பல்கலைக்கழகத்தில் இளம் பொலிஸ் உத்தியோகத்தர் பியர்சாலாவின் மல்யுத்த பயிற்சியாளராக இருந்த டொராண்டோ காவல்துறை அதிகாரி ஷான் ஜெரிஸ், இளம் மாணவ-விளையாட்டு வீரர் வேலையைப் பற்றியும் அது எப்படி திறமையாக விளங்கியது என்றும் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான குயின்ஸ் பார்க் வளாகத்தில் சிறப்புக் காவலராகப் பணிபுரிந்தபோது, பியர்சாலா அவர்கள் அனைவராலும் கவனிக்கப்பெறுகின்ற ஒருவராக விளங்கினார் என்றும் அவர் OPP க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவருக்குத் தானே தெரியப்படுத்தியதாகவும் அவரது உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒன்ராறியோ போலீஸ் கல்லூரியில் பட்டம் பெற்றபோது, கெரிஸ் தனது பேட்ஜை அவருக்கு வழங்க முடியும் என்று நம்பினார், ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் அதைத் தடுத்தன.
“அவரும் விட்டுக்கொடுப்பவர் அல்ல. அவர் செய்த எல்லாவற்றிலும் அவர் விடாமுயற்சியுடன் இருந்தார்.”
“ஒரு போலீஸ் அதிகாரியாக உள்ளவர்கள் உதவவும், உலகை சிறந்த இடமாக மாற்றவும் விரும்புகிறார்கள். சிலர் அது நடக்க விரும்பவில்லை.”
செப்டம்பர் முதல் மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்காவது போலீஸ் அதிகாரி பியர்சாலா ஆவார்.
இவ்வாறு தெரிவித்தார் ஒன்ராறியோ மாகாண காவல்துறை சங்கத் தலைவர் ஜான் செராசுலோ அவர்கள். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் , பியர்சாலாவின் மரணம், காவல்துறை அதிகாரிகள் தினமும் தங்களைத் தாங்களே ஆபத்தில் ஆழ்த்துவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் அவர்கள் நாளொன்றுக்கு 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும், வருடத்திற்கு 365 நாட்களும் ஆபத்தான வேலையைச் செய்கிறார்கள். காவல்துறையில் வழக்கமான அழைப்பு என்று எதுவும் இல்லை என்பதை இந்தச் சூழ்நிலை எடுத்துக்காட்டுகிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் ” கொல்லப்பட்ட கிரெக்கின் சேவை மற்றும் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது” என்றும் “வாழ்க்கையில் அவர் எப்போதும் நாயகனாக நினைவுகூரப்படுவார், மரணம் அல்ல. எங்கள் உறுப்பினர்கள் ஒன்ராறியோவின் குடிமக்களுக்கு சேவை செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் என்ற காரணங்களுக்காகவே அவர்கள் தினமும் பொலிஸ் பணிகளுக்கு செல்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.